Feb 16, 2012
காதல்
கூடித் திரிவதும்
சேர்ந்து மகிழ்வதும்
அன்பை பகிர்வதும்
உருகி கரைவதும்
மட்டும் அல்ல
விட்டு
விலகுவதும்
உண்மையான காதலே!
Sep 25, 2010
ஆழப்புரிதல்
இறைவன் அருளோ,
மரபின் தரமோ,
பஞ்சமில்லா ஞானம்!
அச்சமோ, சோம்பலோ
ஆழ் செல்ல தயக்கம்!
அகலம் எளிதாவதால்,
நாற்புறமும் பரவுகிறேன்!
ஆழமில்லா அகலம்
கால விரயம்!
Sep 8, 2010
தேடல்
துக்கத்தில் சந்தோசம்!
கோபத்தில் சாந்தம்!
துரோகத்தில் நம்பிக்கை!
நித்தம் மாறும் முகமூடிகள்!
நிஜ முகம் தொலைத்து
தேடலில் நான்!
தனிமை
தெளிய மறுக்கும் குழப்பங்கள்
நீங்க மறுக்கும் சஞ்சலங்கள்
விட மறுக்கும் பயங்கள்
புரிய மறுக்கும் உறவுகள்
வாழ்வை மறுக்கும் மனம்
எரியும் கற்பூரமாய்
தனிமையில் நான்!
தனித்துவம்
இது தான் இயல்பென்று
வாழ்வோடத்தில் தனித்துவம்
தொலைக்கும் கோழையாகாததால்
விலகிய சமூகம்
தனிமையை தானமாக்கியது!
சுழலும் கால சக்கரத்தில்
சரி, தவறு இட மாறும்!
உறுத்தாத மனசாட்சி
நேர்மைக்கு சாட்சி!
பின் தொடரும் குழப்பம்
முடிவற்ற இலக்குகள்
தெளிவற்ற பாதைகள்
நாளை ஒரு கேள்விக்குறி?
தொடக்கமும் முடிவும் ஒன்று
இருந்தும் குழப்பங்கள்
நிழல் போல்!
அந்தரங்கம்
பிரித்தெடுக்க முடியாதபடி
பொக்கிசங்களும், குப்பைகளும்
மனதின் ஆழத்தில்!
என்னை இழக்கும் தருணங்களில்
மெல்ல வெளி வந்து
மீண்டும் சிறை செல்லும்!
பகிர்ந்து கொள்ள முடியாத
உணர்வுகள் சாபமே!
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)